பழையாறை அரண்மனை - பயண அனுபவம் !

கட்டுரை : சசிதரன் | தலைப்பு : ,

Email | Print this Articleகண்ணை மூடிக்கொண்டு கருப்பு வெள்ளை நிறத்தில் அப்படியே ஆயிரம் வருடம் கடந்து கற்பனை ஓடத்தில் பயணிக்கத் துவங்கினேன். "மாமன்னர் ராஜ ராஜ சோழன்" அரண்மனையில் இருந்து இன்னும் சற்று நேரத்தில் வெளியே வரவிருக்கிறார் என்பதற்காக எக்காளங்கள் முழங்கப்படுகின்றது, தரைப்படை வீரர்கள் சுழன்றடித்து ஆயுத்தமாகிறார்கள், குதிரைப்படையும், யானைப்படையும் அவருக்கு பாதுகாப்பாக முன்னே செல்ல தயாராக வாசலுக்கு வெளியே நின்றுகொண்டுள்ளது, சோழ தேசத்து மக்கள் அவரை காண சுற்றி நின்று ஆர்பரித்துக் கொண்டிருகிறார்கள், கைகளை மடக்கி மார்பில் ஓங்கி அடித்துக்கொண்டு "சோழம், சோழம், சோழம்" என்ற வீர கோழமிட்டுக்கொண்டே இருகிறார்கள், சிலர் மன்னரின் மெய்கீர்த்தியை புகழ்ந்து பாடுகிறார்கள், அவர் வரவிருக்கும் வழியை சரி செய்து கொண்டே சுற்றி இருப்பவர்களை சந்தேகக்கண்ணோடு நோட்டமிட்டுக்கொண்டே இருக்கிறார்கள் காவலர்கள்" இறங்கலாமா? என்ற குரல் கேட்டதும் சட்டென கண்விழித்தேன், அது என்னுடன் வண்டியில் வந்த என் நண்பரின் குரல்.. அடடா !! நிகழ் உலகை காட்டிலும் கற்பனை உலகம் எவ்வளவு அழகானது! இந்த கற்பனை உலகிற்கு கொண்டு சென்ற எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் வரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டே இறங்கினேன்...விஜயலாய சோழன், ஆதித்ய சோழன் 1, பராந்தக சோழன், கண்டராதித்த்ய சோழன், அரிங்ஞய சோழன், சுந்தர சோழன், உத்தம சோழன், ராஜ ராஜ சோழன், அவர்கள் மனைவி, மக்கள் என மொத்த சோழ வம்சமே வசித்த இடம். எத்தனை அரசு அலுவலர்கள் இந்த இடத்தை மிதித்திருபார்கள், எத்தனை போர் வீரர்கள் இங்கே காவலுக்கு நின்றிருப்பார்கள், எத்தனை முறை இந்த சாலையில் தேர்ச் சக்கரங்கள் சுழன்றிருக்கும் !?, எத்தனை குதிரைகள் ஓடியிக்கும்!?, எத்தனை யானைகள் வளம் வந்திருக்கும்!?... கேள்விகள் நீண்டு கொண்டே போனது... துள்ளி குதித்து ஓடினேன். செல்லும் வழி எல்லாம் பானை ஓடுகளின் சிதறல்கள், ஞாபக அர்த்தமாக சிலவற்றை எடுத்து சட்டை பையில் போட்டுக்கொண்டேன். தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜ ராஜன் எத்தனை நாட்கள், தான் எழுப்பும் கோயிலை நினைத்து இங்கே கனவுகளோடு தூங்கி இருப்பார். அடடா !! கங்கை முதல் கடாரம் வரை வென்ற ராஜேந்திர சோழன் இங்கு தானே ஓடியாடி விளையாடி இருந்திருப்பார்... உடல் சிலிர்த்தது !!

சிலு சிலுவென வீசிய ஆலமரக்காற்று உடலை மட்டுமல்லாமல் மனதையும் சேர்த்து வருடிக்கொண்டிருந்தது... எவ்வளவு பெரிய சாம்ராஜ்யமாக இருந்தாலும் ஒரு நாள் மண்ணுக்கு தான் இரையாக வேண்டும் என்பதை இந்த மண்மேட்டை பார்த்தும், ஏன் இந்த அற்ப மனிதர்கள் உணர மறுக்கிறார்கள் !! அன்று சோழ மன்னர்களின் குழந்தைகள் ஓடி விளையாடிய இடத்தின் மேல் இன்று ஒரு ஆலமரத்தின் குழந்தைகளான விழுதுகள் காற்றில் ஓடி ஆடியபடி விளையாடிக்கொண்டிருந்தது.


மரத்தின் கீழ் வேல் கம்புகள் நடப்பட்ட பெரிய மண்மேடு... விசாரித்ததில் இன்றும் இந்த இடங்களை உழும் போது செப்புக்காசுகளும், பண்டைய காலத்து செங்கற்களும், பானை ஓடுகளும் கிடைகின்றன என்ற தகவல் கிடைத்தது. காற்று சிலு சுலுவென வீசிக்கொண்டே இருக்க... ஒரே மயான அமைதி.... அடடா ! எப்படி இருந்த இடம்... அதுவரை நான் எங்குமே அனுபவிக்காத ஒரு துக்கம் கலந்த மகிழ்ச்சி அங்கே எனக்கு கிடைத்தது, அது ஒருவித வலி... அதை உணர்ந்தாலோழிய,எழுத்தில் கொண்டு வர முடியாது. அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை... அங்கே நடப்பட்டிருந்த ஆளுயர வேல் கம்புகளை கையில் எடுத்து, வயதையும் மறந்து விளையாடிகொண்டிருந்தேன், எவ்வளவு நேரம் போனது என தெரியவில்லை...

போகலாமா!? என்ற குரல் ஒலித்தது... போய்தான் ஆகா வேண்டுமா என்ற இன்னொரு குரல் மனதில் ஒலித்தது... பிரிய மனமில்லாமல் விடைகொடுத்தேன்.

திரும்பும் போது மனதில் ஒரே ஒரு கேள்வி எழுந்தது ஆயிரம் வருடம் நிலைத்திற்கும் அளவிற்கு பாறைகளால் கோயில்களை எழுப்பியவர்கள், தான் வசிக்கும் இடத்தை வெறும் செங்கற்களால் கட்டிக்கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள் என்றால்.....!!??

இத்தனை சிறப்புமிக்க சோழ வம்சம் வசித்த இடம், சிதைக்கப்பட்ட வரலாறு பின்வரும் பதிவுகளில்...பகிர்க !9 comments:

 1. கண்களில் நீர் துளிர் விடுகிறது

  ReplyDelete
 2. பெரும் கோயில்களை கட்டிய எங்கள் பாட்டன்கள் , கோட்டைகளையும் அரண்களையும் அமைத்திருந்தால் , எமது ஆட்சி இன்றும் தொடர்ந்திருக்கும்

  ReplyDelete
 3. சத்தியமா சொல்றேன்,பாலகுமாரன் ஐயாவின் உடையார் படித்த பொழுது என்ன உணர்வு எற்பட்டுசோ ,அந்த உணர்வு இந்த கட்டுரையை படிக்கும் போது.கண்ணீர் துளிகள் என்னை அறியாமல்.தஞ்சவுர்காரனாகிய நான்,எம் மன்னன் ராஜராஜனை நினைக்காத நாள் இல்லை.அவர் ஒரு மகான்.நீங்கள் சிறப்பான பணி செய்து கொண்டு வருகிறிர்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.எப்பொழுதும் ஆதரவு உண்டு.சோழம்!சோழம்!சோழம்!
  இப்படிக்கு
  கபிலன் .

  ReplyDelete
 4. சோழம்..... சோழம்..........சோழம்.......

  ReplyDelete
 5. Payana anupavam muthlil sellum pathai patri ezhutha vendama

  ReplyDelete
 6. where is palaiyarai palace???? plaese tell. iam very eager to go there?

  ReplyDelete
 7. varalaatrai marantha nam indraiya thamizhinam ithai padithavathu unarattum nam thamizhinathin perumaigalai...

  ReplyDelete
 8. Dear sir,

  My name is Padmanabhan. I am a Short film/documentary film director. I am regularly reading your articles about our History. All are excellent and amazing. Most of your information must be videograhed and preserved. If you have any interest in doing so, kindly contact me through the mail Id : d_padmanabhan@cpcl.co.in

  with warm regards

  D.PADMANABHAN

  ReplyDelete
 9. Really great solla varthaiye kidaikala eppdi oru arasan vazhthu irukar thanoda irupidatha pathi kavala padama ....

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை பகிர்க...

பிரபலமான பதிவுகள்